Friday, May 22, 2020

Ka Pae Ranasingam - Official Teaser | Vijay Sethupathi, Aishwarya Rajesh | P Virumandi | Ghibran

பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை படக்குழுவினர் வெளியிட்டனர். தாப்போது இதன் டிசர் வெளியிடப்பட்டுள்ளது

திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல் - சீனு ராமசாமி

2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் சீனு ராமசாமி. 'தென்மேற்கு பருவக்காற்று', ‘நீர் பறவை', ‘இடம் பொருள் ஏவல்' 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியதும் இவரே அதில் மக்கள் செல்வன் நடித்திருக்கும் 'இடம் பொருள் ஏவல்' பல ஆண்டுகளாக வெளிவராமல் உள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படம் தற்போது நிலவு ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதி செய்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி. அது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை,இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி இடம் பொருள் ஏவல் வெளியீடு", என்று குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, May 20, 2020

Karthik Dial Seytha Yenn - A Short Film by Gautham Vasudev Menon | STR | Trisha | A R Rahman

டி. இமான் இசையில் 'நான் தான் சிவா' பாடல்கள் வந்தாச்சி

பாக்யராஜ் முந்தானை முடிச்சு ரீமேகை இயக்க ஹீரோவாக இவரா?

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜே இயக்கி இருந்தார். இப்படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 37 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தையும் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க உள்ளார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு கொரோனா ஊரடங்குக்கு பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கமல்ஹாசனுக்கு வில்லனாகும் மக்கள் செல்வன்

கடந்த ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்' அறிவித்திருந்தார், இப்படம் 1992-ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘தேவர் மகன்' திரைப்படத்தின் தொடர்ச்சி என்றும், இதில் முதல் பகுதியிலிருந்து வடிவேலு மற்றும் ரேவதி போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. பல முக்கிய நடிகர்களுடன் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சேரக்கூடும் என்று கூறப்பட்டாலும், அதில் அவர் படத்தில் நாசரின் மகனாக நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Monday, May 18, 2020

அம்புலி கோகுல்நாத் குறும்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகரும் மைம் கலைஞருமான கோகுல்நாத். பத்தாயிரம் கோடி என்ற படத்தின் மூலம் இவர் நடிகராக களமிறங்கினர். அதன் பிறகு நடிகர் பார்த்திபன் அவர்களின் நடிப்பில் வெளியான அம்புலி என்ற படத்தில் அம்புலி என்ற மிருகமாக இவர் நடித்து பலரின் பாராட்டை பெற்றார். இதனால் இவரை அம்புலி கோகுல்நாத் என்றும் அன்புடன் அழைப்பது உண்டு. இந்த ஊரடங்கு நேரத்தில் அவர் கதை, திரைக்கதை, எடிட்டிங் என்று எல்லாம் செய்து ஸ்ப்ளிட் 'SPLIT' என்ற குறும்படத்தை உருவாகியுள்ளார். இந்த குறும்படத்தை இன்று மாலை 4 மணிக்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிடுள்ளார்.

மாஸ்டர் ட்றைலரை ” - 6 முறை பார்த்ததாக கூறும் நடிகர்.!

Sunday, May 17, 2020

2 மாத ஊரடங்கில் 11 கதைகளை ரெடி சிம்புவை இயக்கவுள்ள இயக்குனர்

கொரோனா ஊரடங்கில் தான் 11 கதை தயார் செய்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த ஊரடங்கில் நான் புத்தகம் படிக்க அதிக நேரம் செலவிடுகிறேன். இதுதவிர பியானோ வாசிக்க கற்றுக்கொள்கிறேன். இந்த 2 மாத ஊரடங்கில் 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். சிம்பு படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், அஞ்சாதே படத்தை பார்த்துவிட்டு எனது அலுவலகத்திற்கு வந்த சிம்பு, என்னுடன் பணியாற்ற விரும்பினார். சமீபத்தில் அவரை சந்தித்து கதை கூறினேன். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிம்பு எனது படத்தில் நடிப்பார் என மிஷ்கின் கூறினார்.

சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ அப்டேட்

சந்தானத்தின் பிஸ்கோத் இறுதிக்கட்ட ட்ரிம்மிங்கில் உள்ளது. எனது எடிட்டர் ஆர்.கே செல்வாவுடன் இருக்கிறேன். இந்த மாத கடைசியில் இறுதி நகல் ரெடியாகிவிடும்” எனக் கூறியுள்ளார். என இயக்குநர் ஆர். கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Saturday, May 16, 2020

Master Director Lokesh Pic with Post

பிக்பாஸ் 3' ஸ்டார் நடிக்க அனிருத் இசை

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த  தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்க, அனிருத் அந்த படத்துக்கு இசையமைக்கிறாராம். இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கிறார். இந்த படம் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறவிருக்கிறது.

Popular Posts

Follow by Email